பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நிலைகளிலே மலர்ந்துள்ள தாமரை மலரிலே திருமகள் வீற்றிருப்பாள். நீர்த்துறைகளிலே முத்துச் சிப்பிகள் ஆனந்தமாகக் கிடக்கும், வைக்கோல் போர்களிலே அன்னப் பறவைகள் இனிது கிடக்கும். பூம் பொழில்களிலே மயில்கள் மகிழ்ந்து உறையும்.


நீரிடை உறங்கும் சங்கம்
     நிழலிடை உறங்கும் மேதி:
தாரிடை உறங்கும் வண்டு
     தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;
     துறையிடம் உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்;
     பொழிலிடை உறங்கும் தோகை.

விவசாயிகள் கரும்பு பயிர் செய்வார்கள். பிறகு அந்தக் கரும்பை வெட்டி ஆலையிலே நசுக்கிச் சாறு பிழிவார்கள். கொண்டது போக மிஞ்சிய சாறு வழிந்து ஓடும். பாளைகளின் நுனியைச் சீவுவார்கள். அப்படிச் சீவுவதாலே கள் வடிந்து பெருக்கெடுத்து ஓடும். மலை உச்சியிலே உள்ள தேன் அடைமீது வேடர்கள் அம்பு எய்து தேன் எடுப்பார்கள். எப்படி எடுக்கிறார்கள்? அம்பிலே நூலைக் கட்டி விடுகிறார்கள், அம்பு தேனடை மீது பாய்ந்து சொருகி நிற்கும், அந்நூல் வழியே தேன் வழியும், தேன் பெருக்கெடுத்து ஓடும். பலா மரங்கள் காய்தரும். பலாக்காய் மரத்திலேயே பழுக்கும். பழுத்து வெடிக்கும். பலாச்சுளைகளிலே உள்ள இனிய ரசம் அந்த வெடிப்பு வழியே ஒழுகும். இவ்விதம் வழியப்பெற்ற தேன், கரும்புச்சாறு, கள் எல்லாம் ஒன்று கலந்து ஆறாகப் பெருகி கடலினை அடையும். கடல் மீன்கள் அத்தேனை உண்டு களிக்கும்.