பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

எல்லாப் பெரும் செல்வமும் நாட்டு மக்கள் எல்லாருக்கும் கிடைத்தன. செல்வம் பொது உடைமையாக இருந்தது. சமதர்மம் நிலவியது. அதனாலே என்ன ஆயிற்று? இல்லாரும் இல்லை. இல்லை என்கிற வறுமைமக்கள் அந்த நாட்டிலே இல்லை. உடையாரும் இல்லை. எல்லாம் எனதுடைமை என்று சொல்லக்கூடிய பெரும் பணக்காரர்களும் இல்லை. அதாவது ஏழை—பணக்காரன் என்பது கோசல நாட்டிலே இல்லை.

அடிப்படையான பிரச்னை தீர்ந்துவிட்டது. அடுத்த பிரச்னை என்ன? கல்வி அந்த நாட்டிலே கல்வி எப்படி இருந்தது? கல்லாதவரே இல்லை. எல்லாரும் கற்றவர்கள். ஆகவே "இவன் கல்வி, கற்றவன்; அதிலே கரை கண்டவன் ரொம்பப் படித்தவன்; “இவன் கல்வி கல்லாதவன்; படிக்காதவன்” என்கிற வேற்றுமை அந்த நாட்டிலே இல்லை. எல்லாரும் படித்தவரே; கல்வி கற்றவரே. எழுத்து அறியாமை அந்த நாட்டிலே இல்லை. ‘இல்லிடரசி’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அது அந்த நாட்டில் இல்லை.

கல்லாது நிற்பர் பிறர்
இன்மையின் கல்விமுற்ற
வல்லாரும் இல்லை; அவை
வல்லர் அல்லாரும் இல்லை.

கல்விக்கு அடுத்தபடியாக வருவது விளையாட்டு. விளையாட்டு பற்றியும் விளையாடும் இடங்கள் பற்றியும் கம்பர் என்ன சொல்கிறார் என்று கவனிப்போம்.

இப்போது பெருநகரங்களில் என்ன காண்கிறோம்? சந்து பொந்துகளிலும், சாக்கடை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடல் காண்கிறோம். கிரிக்கெட் பந்தை வீசுவான்.