பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

ஒருவன் மட்டை கொண்டு சாடுவான் இன்னொருவன், தெரு வழியே போகிறவர்கள் பயந்து பயந்து போவார்கள். கோசல நாட்டிலே இப்படி இல்லை, இளம் பெண்கள் பந்து விளையாடுவார்கள். கந்தனைப்போல் அழகிய கட்டிளங்காளைகள் விற்போர், மல்போர் முதலியன பயில்வார்கள், இத்தகைய விளையாட்டுக் கூடங்கள் எங்கே இருந்தன? காற்றோட்டம் இல்லாத கட்டிடங்களில் இருந்தனவா? இல்லை; இல்லை, நறுமணம் வீசுகின்ற சண்பகத் தோட்டங்கள். மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் அத்தோட்டங்களிலே பெண்கள் பந்து விளையாடும் கழகங்கள் இருந்தன.


பந்தினை இளையவர் பயில் இடம்...............
..................................
சந்தன வனம் அல சண்பக வனமாம்
.....................மயிலூர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்
.........................................
.........................................
நந்தன வனம் அல நறை விரிபுறவம்

மயிலேறும் பெருமானாகிய பாலமுருகன் போன்ற அழகுள்ள வாலிபர்கள் வாள் வித்தை, வில் வித்தை, குஸ்தி, குத்துச் சண்டை முதலிய கலைகளை எங்கே பயின்றார்கள்? நறுமணம் வீசும் முல்லைக் காடுகளிலே பயின்றார்கள். இப்படியாக இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களை நமக்குக் காட்டுகிறார் கம்பர்.

சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியவர்களின் விளையாட்டு பற்றிச் சொன்னார். பெரியவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? பெரியவர்களான ஆண் பிள்ளைகள் எப்படிப் பொழுது போக்கினார்கள்? கோழிச் சண்டையிலே பொழுது