பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53



ரம்பெலாம் முத்தம் ; தத்தும்
      மடை எலாம் பணிலம் ; மா நீர்க்
குரம்பெலாம் செம்பொன் ; மேதிக்
      குழி எலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் ; சாலிப்
      பரப்பெலாம் அன்னம் ; பாங்கர்
கரம்பெலாம் செந்தேன் ; சந்தக்
      கா எலாம் களிவண்டுக் கூட்டம்.

கழனிகளின் வரப்பு எங்கும் முத்துக்கள்! நீர் பாயும் மடைகளில் எல்லாம் சங்குகள்! வாய்க்கால்கள் எங்கும் சிவந்த பொன் கட்டிகள்! எருமைகள் விழுந்து புரள்கிற சேற்றுக் குட்டைகளில் எல்லாம் செங்கழு நீர் மலர்கள்; குவியல் குவியலாக! பரம்பு அடித்துச் சமன் செய்யப்பட்ட வயல்கள் தோறும் பவளம்! நெல் பயிர்கள் நடுவே அன்னப் பறவைகள்! நறுமணம் வீசும் பூங்கா எங்கும் வண்டுக் கூட்டம்.

வரம்பு எலாம்—கழனிகளின் வரப்புகளில் எல்லாம்; முத்தம்—முத்துக்கள்; தத்து மடை எலாம்–நீர் தாவிப் பாய்கிற மதகுகளில் எல்லாம்; பணிலம்—சங்குகள்; மா நீர்க் குரம்பு எலாம்—பெரிய நீர்ப் பெருக்குடைய வயல் கரை எங்கும்; செம்பொன்—சிவந்த பொன் சட்டிகள்; மேதிக் குழி எலாம்—எருமைகள் விழுந்து புரள்கிற குட்டைகளில் எல்லாம்; கழுநீர்க் கொள்ளை—ஏராளமான செங்கழுநீர் மலர்களின் குவியல் பரம்பு எலாம்—பரம்பு அடித்துச் சமன் செய்யப்—