பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

கடலில் உள்ள மீன்கள் எல்லாம் அத்தேனை உண்டுகளிக்கின்றன.

ஆலை வாய்க் கரும்பின் தேனும்—கரும்பு ஆலைகளிலிருந்து வழிந்து ஓடுகின்ற தேன் போல் இனிய கரும்புச் சாறும்; அரிதலைப் பாளைத் தேனும்—அரிந்து நுனிகளை உடைய பாளையினின்றும் தோன்றியகள்ளும்; சோலை வாய்க் கனியின் தேனும்—சோலைகளில் பழுத்து விழுந்த கனிகளின் சாறும்; தாடை இழி இறாலின் தேனும்—அம்பு வழியே பாயும் தேனும்; மாலை வாய் உகுத்த தேனும்—மலர் மாலைகளில் இருந்து வழிந்த தேனும்; வரம்பு இகந்து—எல்லையில்லாது பெருகி; ஓடி=ஓடி, வங்க வேலை வாய் மடுப்ப—மரக்கலங்கள் நிறுத்தப் பட்டுள்ள கடலை அடைய; மீன் எலாம்——(அக்கடலில் உள்ள) மீன்கள் எல்லாம் உண்டுகளிக்கும்—(அத்தேனை) உண்டு மகிழும்.

சேல் உண்ட ஒண்கணாரில்
     திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி
     வளர்த்திய மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி
     கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை
     தாலாட்டும் பண்ணை

சிவந்த கால்களை உடைய அன்னங்கள் தங்கள் குஞ்சுகளைத் தாமரையிலே படுக்க வைத்து விட்டு மகிழ்ந்து திரிந்து கொண்டு இருக்கின்றன. முழங்கால் வரை சேறு