பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

செய்து தருவதில்; தவம் ஒக்கும்—தவம் போல இருந்தான்; முன் நின்று—தலைமை வகித்து முன்னே நின்று ஒரு செல்கதி உய்க்கு நீரால்—செல்வதற்குரிய நல்ல வழியில் நடத்திச் செல்வதால்; சேய் ஒக்கும்—மகனை ஒப்பான்; நோய் ஒக்கும்—தீய வழிச்செல்வோரை வருத்துவதில் நோய் போல இருப்பான்; எனின்—என்றாலும்; மருந்து ஒக்கும்—கருணை காட்டுவதில் அந்நோய் போக்கும் மருந்து போல இருந்தான்.

𝑥𝑥𝑥𝑥

இவ்வாறு நல்லாட்சி செய்து வந்த தசரதன், தனக்கு மகப்பேறு இல்லாமை குறித்து மிக வருந்தினான்; குல குருவாகிய வசிஷ்ட முனிவரிடம் தனது குறையை வெளியிட்டான். வசிஷ்டரின் ஆலோசனைப்படி, மகப்பேறு கருதி யாகம் ஒன்று செய்ய முடிவு செய்தான் தசரதன்.

𝑥𝑥𝑥𝑥

ருகலை அறிவு நீதி
      மனு நெறி வரம்பு வாய்மை
தருகலை மறையும் எண்ணில்
      சதுமுகற்கு உவமை சான்றோன்
திருகலையுடைய இந்தச்
      செகத்துளோர் தன்மை தேரா
ஒரு கலைமுகச் சிருங்க
      உயர் தவன் வருத வேண்டும்.

ரிசிய சிருங்கர் என்ற கலைக்கோட்டு முனிவர் வேதநூல் வல்லவர்; மனுதர்ம சாத்திரம் நன்கு அறிந்தவர்; கலை