பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74


கணிகையரும் கலைக்கோட்டு முனிவர் இருப்பிடம் சென்று முனிவர் போல நடித்தனர். ஆண் பெண் வேற்றுமை அறியாத அம்முனிவரும் அவர் தம் சொல்லை மெய் என்று நம்பினார்; அவர் தம் அழைப்புக்கு இணங்கினார்.

அங்க நாடு போந்தார். முனிவரின் வருகை அறிந்த அங்க நாட்டு மன்னன் தனது நாட்டை அலங்கரித்தான். முனிவரை வரவேற்று விழாக் கொண்டாடினான்.

முனிவர் வரவே மழையும் வந்தது நாடும் செழித்தது.

“இப்போது அம் முனிவர் அங்க நாட்டில் இருக்கிறார்” என்று கூறினார் வசிஷ்டர்.

𝑥𝑥𝑥𝑥

ன்றலுமே முனிவரன் தன்
      அடி இறைஞ்சி, ‘ஈண்டு
      ஏகிக் கொணர்வேன்’ என்னாத்
துன்று கழல் முடி வேத்தர்
      அடிபோற்றச் சுமந்திரனே
      முதலா உள்ள
வன் திறல் சேர் அமைச்சர்
      தொழ மாமணித் தேர்
      ஏறுதலும் வானோர் வாழ்த்தி
‘இன்று எமது வினைமுடிந்தது’
      எனச் சொரிந்தார்
      மலர் மாரி இடைவிடாமல்

இவ்வாறு வசிட்டமுனிவர் கூறிய உடனே தசரதன் என்ன செய்தான்?