பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

விடாது எண்ணி எண்ணி அவனே தன் எதிர் வந்து நிற்பான் போல் காண்கிறாள். அவன் சீதையைக் கேட்கிறான். அவள் இராமனைச் சொல்கிறாள்.

இரண்டும் உரு வெளித் தோற்றமே! சமயம் பார்த்து மெதுவாக விண்ணப்பம் நீட்டுகிறாள் சூர்ப்பணகை. “நீ போய் சீதையைத் தூக்கிக்கொண்டு வந்து இன்பமடை, நான் இன்புறுவதற்கு இராமனை எனக்குக் கொடு” என்கிறாள்.

மீன் கொண்டு ஊடாடும் வேலை
        மேகலை உலகம் ஏத்தத்
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல்
        சிற்றிடைச் சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ; உன்
        வாள் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம்
        இராமனைத் தருதி என்பால்!

வண்டு மொய்த்த மலர் கூந்தலும், சிற்றிடையும் கொண்ட சீதை என்கிற மான் போன்ற மங்கையைத் தூக்கிக் கொண்டு வந்து நீ இன்பம் அடைவாய் நான் இன்புறும் வண்ணம் இராமனை எனக்குக்கொடு.

மீன் கொண்டு– மீன்களைத் தன்னிடத்திலே கொண்டு; ஊடாடும்– அலை வீசுகிற; வேலை– கடலையே; மேகலை– மேகலாபரணமாக உடைய; உலகம்– இந்த உலகத்தினர்; ஏத்த– புகழும்படி; தேன் கொண்டு ஊடாடும் கூந்தல்– வண்டுகள் தனக்கு இடமாகத் திரியும் கூந்தல்; சிற்றிடை– சிறிய இடையையும் உடைய; சீதை என்னும் - சீதை