பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அபகரிக்க; துணை கொண்டு இட்டு - உன்னை என் துணையாகக் கொண்டு; இப்பழி நின்னால் தீரிய - எனக்கு ஏற்பட்டுள்ள இப்பழியை உன்னைக்கொண்டு நீக்கிக்கொள்ள இவண் வந்தேன் - இவ்விடம் வந்தேன்; என்றான் - என்று கூறினான்.

இச் சொல் அனைத்தும் சொல்லி
        அரக்கன் எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன்
        என்னக் கிளர்வான் முன்
சிச்சி எனத் தன் மெய்ச் செவி
        பொத்தித் தெருமந்தான்
அச்சம் அகற்றிச் செற்ற
        மனத்தோடு அறைகின்றான்.

இராவணன் கூறிய சொற்களைக் கேட்டான் மாரீசன். இரும்பை உருக்கிக் காதிலே ஊற்றியது போல இருந்தது. ‘சிச்சீ’ என்று கூறித் தன் காதுகளைப் பொத்திக்கொண்டான்; வருந்தினான்; பயம் நீங்கப் பெற்றான்; கோபமுற்றான்; பின் வருமாறு சொல்கின்றான்.

அரக்கன் - இராவணன்; எரிகின்ற கிச்சின் . எரிகின்ற நெருப்பில்; உருக்கு இட்டு உய்த்தனன் என்ன - உருக்கை இட்டுக் காய்ச்சி அதனைத் தன் காதுகளில் செலுத்தினான் என்னும் படி; இச்சொல் அனைத்தும் - இவ்வித வார்த்தைகள் எல்லாம்; சொல்லி - தன்னிடம் சொல்லி; கிளர்வான் முன்- தன்னைத் தூண்டும்; அந்த - இராவணன் முன் சிச்சி எனத் தன் மெய்ச் செவி பொத்தி - சீச்சீ என்று சொல்லித் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு; தெருமந்தான் - குழப்ப-