பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

முற்று வருந்தினவனாகி; அச்சம் அகற்றி - ஒருவாறு பயம் நீங்கப் பெற்றவனாய்; செற்ற மனத்தோடு - கோபமுற்ற மனத்துடனே; அழைக்கின்றான் - பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்.


மன்னா! நீ நின் வாழ்வை
        முடித்தாய்! மதியற்றாய்
உன்னால் அன்று ஈது ஊழ்வினை
        என்றே உணர்கின்றேன்;
இன்னா தேனும் யான் இது
        உரைப்பன் இதம் என்னச்
சொன்னான் அன்றே அன்னவனுக்குத்
        துணிவு எல்லாம்.

“அரசனே! நீ உனது வாழ்வை முடித்துக் கொண்டாய்; புத்தி கெட்டுப் போனாய்; இது உன் செயல் அன்று - உனது பண்டை வினையின் செயலே என்று நினைக்கிறேன். நான் சொல்லப்போவது உனக்குப் பிடிக்காது இருப்பினும் உனக்கு நல்லதே சொல்வேன்” என்று சில நல்லுரைகள் நவின்றான் மாரீசன்.

மன்னா - அரசே! நீ உன் வாழ்வை முடித்தாய் - நீ உனது வாழ்நாளை முடித்துக் கொண்டாய்; மதி அற்றாய் - உனது அறிவை இழந்துவிட்டாய்; ஈது உன்னால் அன்று - இச் செயல் உன்னால் ஆக்கப்பட்டது அன்று ஊழ்வினை - உனது பழைய வினையின் பயனே இவ்வாறு உன்னைத் தூண்டியது; என்றே உணர்கின்றேன் - என்றே கருதுகின்றேன்; இன்னாது ஏனும் (உனக்கு) ஆகாதது என்று தோன்றினும்; இதம் இது யான் உரைப்பன் - உனக்கு