பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

புறனான அதர்ம வலிமையினாலே; பின்னும் இழக்க - பின்பு இழந்து விடுதற்கு; புகுவாயோ - அத்தீய செயலில் புக்கு நீ கெடப் போகின்றாயோ? சொல்வாய் - சொல்வாயாக.


நாரம் கொண்டார் நாடு
        கவர்ந்தார் நடை அல்லா
வாரம் கொண்டார் மற்றொருவற்கு
        ஆய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர்
        தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்; கண்டகர்
        உய்ந்தார் எவர்? ஐயா!

ஐயனே! பிறர் நாட்டிலே உள்ள நீரைத் தம் வலியாலோ அல்லது திருட்டுத் தனமாகவோ அபகரித்தவர்.

பிறர் நாட்டை அதர்ம வழியிலே பிடுங்கிக் கொண்டவர்.

தொன்று தொட்டு மனு நீதி முறைப்படி வாரம் வசூலிக்காமல், அதர்ம முறையில் குடி வாரம் வசூல் செய்வோர்.

மற்றொருவருக்கு வாழ்க்கைத் துணையாகி அவர் தம் மனையிலே வாழும் மனைவியை அபகரித்துக் கொண்டவரும், பெரும் பாவிகள் இவர்களை தரும தேவதை தானே அழிக்கும். இவருள் உய்ந்தார் எவர்? எவரும் இலர்.

ஐயா - ஐயனே; நாரம் கொண்டார் - பிறர் நாட்டிலே உள்ள நீரை தம் வலியால் அல்லது திருட்டுத் தனத்தால் அபகரித்துக் கொண்டவரும்; நாடு கவர்ந்தார் - பிறருடைய நாட்டை அதர்ம வழியில் பற்றிக் கொண்டவரும்; நடை-