பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இல்லா வாரம் கொண்டார் - மனு முறைப்படி நடைபெற்று வரும் முறை இல்லாமல் அதிகமான குடிவாரத்தை (வரியை) குடிகளிடமிருந்து வலிய வாங்கிக் கொண்டவரும்; மற்று ஒருவர்க்கு ஆய மனை வாழும் -வேறு ஒருவருக்கு உரியவள் ஆகி அவனது வீட்டில் வாழ்ந்துவரும்; தாரம் கொண்டார் - மனைவியைத் தம் வலியால் அபகரித்துக் கொண்டவரும்; என்று இவர் தம்மை - என்று சொல்லப்பட்ட இவர்களை; தருமம் தான் - தரும தேவதை தானே வந்து; ஈரும் - அறுத்து அழிக்கும்; கண்டகர் உய்ந்தார் எவர்? - பாவிகள் யாரே அழிவடையாமல் தப்பிப் பிழைத்தார்; (ஒருவரும் இலர்.)


அந்தரம் உற்றான் அகலிகை
        பொற்பால் அழிவுற்றான்;
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்
        தாம் இழிபு உற்றார்?
செந்திரு ஒப்பார் எத்தனையோர்
        நின் திரு உண்பார்?
மந்திரம் அற்றார் உற்றது
        உரைத்தாய் மதி அற்றாய்.

தேவர் உலகினை ஆளும் தேவேந்திரன் அகலிகையின் அழகிலே மயங்கினான்; அழிவுற்றான். இம்மாதிரி கெட்டு அழிந்தோர் பலர். உன் பால் திருமகளை ஒத்தார் பலர் உளர். அங்ங்ணமிருக்க உனக்கு ஏன் இந்தக் கெடுமதி? ஆலோசனையில்லாதவர் கூறிய யோசனை இது. அறிவுகெட்டு விட்டாய்.

அந்தரம் உற்றான் - சுவர்க்கத்தைத் தனக்கு உரிமையாகக் கொண்டு ஆட்சி புரியும் இந்திரன்; அகலிகை பொற்பால்- அகலிகையின் அழகில் ஈடுபட்டு; அழிவுற்றான் -