பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

யாவரும் வெறுக்கத் தக்க சாபக் கேட்டினை அடைந்தான்; இந்திரன் ஒப்பார் - அந்த இந்திரனைப் போன்றவர்; எத்தனையோர் தாம் இழிபு உற்றார் - எத்தனை பேர் தாம் சிறப்பு அழிந்து இழிநிலையுற்றனர்? செம் திரு ஒப்பார்- செவ்விய திருமகளைப் போன்ற அழகுடை மகளிர்; எத்தனையோர் நின் திரு உண்பார் - எவ்வளவு பேர் உன் நலத்தை அனுபவிப்பவராய் உள்ளனர்? (அவ்விதம் இருக்க) மந்திரம் அற்றோர் ஆலோசனையற்றவர்; உற்றது உரைத் தாய் - கூறிய யோசனையைச் சொன்னாய்; மதி அற்றாய்- அறிவு கெட்டவன் ஆனாய்.

செய்தாயேனும் தீவினையோடும்
        பழி அல்லால்
எய்தாது; எய்தாது; எய்தின்
        இராமன் உலகு ஈன்றான்
வைதால் அன்ன வாளிகள்
        கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம்
        முடித்து உன் குழு எல்லாம்
.

உன் எண்ணப்படியே இக்காரியத்தை நீ செய்தாயேனும் பாவம் தான்வரும்; பழி தான்வரும்; வேறு எதுவும் உனக்குக் கிட்டாது; கிட்டாது. அப்படி ஒரு கால் உன் எண்ணம் கை கூடுமாயின் பின் என்ன விளையும் தெரியுமோ? உலகனைத்தும் ஈன்ற திருமாலாகிய இராமபிரானின் சுடுசரத்தால் நீ உன் குலத்தோடு அழிவாய்; உன்னைச் சேர்ந்த அரக்கர் கூட்டம் பூண்டோடு மாயும். இது நிச்சயம்.