பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


மண்ணிலும்‌ சரி விண்ணிலும்‌ சரி தனக்கு ஒப்புமையில்லாத ஓர்‌ பொன்மான்‌ உருக்கொண்டு சீதையை நாடி இராமன்‌ இருந்த காடு சென்றான்‌ மாரீசன்‌.

நல்‌ மான்‌ அனையாள்‌ தனை – அழகிய மான்‌ போன்ற சீதையை; நாடுறுவான்‌ – நாடுதலை மேற்‌ கொண்ட அம்‌மாரீசன்‌; தன்‌ மானம்‌ இலாத – தனக்கு நிகர்‌ இல்லாத; தயங்கு ஒளி சால்‌ – விளங்கும்‌ ஒளி மிக்க; மின்‌ மானமும்‌ – மின்னலோடு கூடிய ஆகாயத்தும்‌; மண்ணும்‌ – புவியிலும்‌; விளங்குவது ஓர்‌ – விளங்குவதான ஒப்பற்ற; பொன்மான்‌ உருவம்‌ கொடு – பொன்மான்‌ உருவம்‌ கொண்டு; போயினான்‌ – இராமன்‌ இருந்த வனம்‌ போனான்‌.


நெற்றிப்‌ பிறையாள்‌
       முனம்‌ நின்றிடலும்‌
முற்றிப்‌ பொழி காதலின்‌
       முந்துறுவாள்‌
பற்றித்‌ தருக என்பென்‌
       எனப்‌ பதையா
வெற்றிச்‌ சிலை வீரனை
       மேவினள்‌ ஆல்‌.

அந்த மான்‌ வந்து சீதை முன்‌ நின்றது; கண்டாள்‌ சீதை. அதன்பால்‌ ஆசை கொண்டாள்‌, இதைப்‌ பற்றி தருமாறு இராமனைக்‌ கேட்பேன்‌ என்று கூறிக்கொண்டு விரைந்து சென்றாள்‌ இராமன்‌ இருக்குமிடத்துக்கு.

நெற்றிப்‌ பிறையாள்‌ முனம்‌ – பிறை மதி போன்ற நெற்றியுடைய சீதையின்‌ முக்னே; நின்றிடலும்‌ – அந்த மான்‌