பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

போய்‌ நிற்கவும்‌; முற்றிப்பொழி காதலின்‌ முந்துறுவாள்‌ – நிறைத்து மேல்‌ ததும்புகின்ற ஆசையின்‌ முன்‌ செல்‌பவளான அவள்‌; பற்றித்‌ தருக என்பென்‌ – இதைப்‌ பிடித்துக்‌ கொடுப்பீர்‌ என்பேன்‌; எனப்பதையா – என்று வேகமாக; வெற்றிச்‌ சிலை – வெற்றி வில்‌ ஏத்திய; வீரனை – இராமன்‌ இருக்குமிடம்‌; மேவினள்‌ – சென்றாள்‌.


அனையவள்‌ கருத்தை உன்னா
       அஞ்சனக்‌ குன்றம்‌ அன்னான்‌
“புனை இழை காட்டு அது” என்று
       போயினான்‌; பொறாத சிந்தைக்‌
கனை கழல்‌ தம்பி பின்பு
       சென்றனன்‌; கடக்க ஒண்ணா
வினை என வந்து நின்ற
       மான்‌, எதிர்‌ விழித்தது அன்று ஏ.

“எங்கே அந்த மான்‌? காட்டு” என்று சொல்லிக்‌ கொண்டே சீதையைப்‌ பின்‌ தொடர்ந்து சென்றான்‌ இராமன்‌. லட்சுமணனும்‌ பின்னே சென்றான்‌. அந்த மானும்‌ அவர்களை விழித்துப்‌ பார்த்தது, எது போல? ஊழ்வினை வருவது போல வந்து நின்ற மான்‌ அவர்களைப்‌ பார்த்தது.

அனையவள்‌ கருத்தை உன்னா – அவ்வாறு வருந்திக்‌ கூறிய சீதையின்‌ நோக்கத்தை எண்ணி; அஞ்சனக்‌ குன்றம்‌ அன்னான்‌ – மை மலை போன்ற இராமன்‌; புனை இழை – பூண்ட அணிகளையுடைய பெண்ணே! அது காட்டு – எங்கே அந்த மானைக்‌ காட்டு; என்று – என்று; போயினான்‌ – அம்‌ மானைக்‌ காணச்‌ சென்றான்‌; பொறாத – அது கண்டு பொறாத மனமுடைய; கனை கழல்‌ – ஒலிக்கும்‌ வீரக்கழல்‌