பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

செய்த மாயத்தால்; இற்று வீழ்ந்தனன் என்னவும் – உயிரற்றக் கீழே விழுந்தான் என்பதை (அவன் குரலால்) கேட்ட பின்பும்; இளையோய் ஒரு நீ – அவனுடைய தம்பியாகிய நீ; என் அயல் நிற்றியோ – என் அருகிலே நிற்கின்றாயோ? என்றாள் – என்று லட்சுமணனை நோக்கிக் கடிந்து கொண்டாள்.

“பார் எனப் புனல் எனாப்
        பவனம் வான், கனல்
பேர் என அவை
        அவன் முனியில் பேருமால்
கார் எனக் கரிய அக்
        கமலக் கண்ணனை
யார் எனக் கருதி இவ்
        இடரின் ஆழ்கின்றீர்?”

“இராமனை – கார் மேனி வண்ணனை – செந்தாமரைக் கண்ணனை – யார் என்று கருதிநீவிர் இத்துன்பத்தில் கிடந்து உழல்கின்றீர்? அவன் சினங்கொண்டால் நிலம், நீர், காற்று, தீ, வானம் எனப்படும் ஐம்பெரும் பூதங்களும் நிலை குலையுமே!” என்றான் இளையவன்.

பார் என – புவி என்றும்; கனல் என – தீ என்றும்; புனல் என – நீர் என்றும்; பவனம் வான் கனல்பேர் என அவை – காற்று ஆகாயம் எனும் பேர் கொண்ட எவையும்; அவன் முனியில் – இராமன் கோபித்தால்; பேரும் ஆல் – அவை நிலை தளர்ந்து கெடும்; ஆதலின்; கார் எனக் கரிய அக்கமலக் கண்ணனை – நீருண்ட மேகம் போலும் கரிய நிறங்கொண்ட செந்தாமரைக் கண்ணனாகிய இராமனை; ஆர் எனக் கருதி –