பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

விதமான உட்பகைகளாகிய; தளை – பந்தங்களையும் அரி – அறுத்த; தவத்து அவர் வடிவும் – துறவியர் வடிவமும்; தாங்கினான் – மேற்கொண்டான்.

ஊண் இலனாம் என
      உலர்ந்த மேனியன்
சேன் நெறி வந்தது
      ஓர் வருத்த செய்கையன்
பாணியின் அளந்து
      இசை படிக்கின்றான் என
வீணையின் இசைபட
      வேதம் பாடுவான்.

நீண்டகாலமாகச் சோறு காணாதவன் என்றுசொல்லும்படியாக, வற்றி உலர்ந்த உடலையுடையவனாய்; நெடுந்துாரம் நடந்து வந்தவன் போல அலுப்பு மேலிட்டவனாய், சாமகானம் செய்து கொண்டு அதற்கு ஏற்ப வீணையொடு கைத்தாளம் போட்டுக்கொண்டு வந்தான்.

ஊண் இலனாம் – நீண்ட நாட்களாக உணவு கொள்ளாதவன்; என – என்று சொல்லும்படியாக; உலர்ந்த மேனியன் – வற்றிக் காய்ந்து போன உடல் உடையவனாய்; சேண் நெறி வந்தது – நீண்ட தூரத்திலிருந்து நடந்து வந்தவன் போல; ஓர் வருத்த செய்கையன் – அலுப்புத் தோன்றும் செயல்கள் உடையோனாய்; பாணியின் அளந்து – கைகளால் தாளம் போட்டுக் கொண்டு, இசைபடிக்கின்றான் என – பாடுகிறான் என்று சொல்லும்படியாக; வீணையின் இசைபட – வீணா கானத்துடன்; வேதம் பாடுவான் – சாம வேதத்தை கானம் செய்வான் ஆனான்.