பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95



“சன்மார்க்க நெறியிலே ஒழுகும் அடிகாள்! நும் போன்ற தவசிகளை அன்றி வேறு தெய்வத்தை நினையாத மனமுடையான் சனக மகாராசன்; அவனது மகள் நான்; என் பெயர் சானகி; காகுத்தன் மனைவி நான்” என்றாள்.

மறு இல் கற்பினாள்– மாசற்ற கற்புடைய சீதாபிராட்டி; அனக மா நெறி படர்– குற்றமற்ற சன்மார்க்க வழி நிற்கும்; அடிகள்– அடிகளே; நும் அலால்– உம் போன்றவர் அல்லாது; நினைவது ஓர் தெய்வம்– நினைக்கக்கூடிய தெய்வம்; வேறு இலாத– வேறு ஒன்று இல்லாத; நெஞ்சினான்– மனங் கொண்ட; மா சனக– மாட்சிமைமிக்க சனக மகாராசனது; மா மகள்– இளங்குமரி; பெயர் சனகி– சானகி என்பது எது பெயர்; யான் காகுத்தன் மனைவி– காகுஸ்தரது மனைவி ஆவேன்; என்றனள்– என்று மறுமொழி கூறினாள்.

அவ்வழி அணையன
        உரைத்த ஆயிழை
“வெவ்வழி வருந்தினிர்
        விளைந்த மூப்பினிர்
இவ்வழி இருவினை
        கடக்க எண்ணினீர்
எவ்வழி நின்றும் இங்கு
        எய்தினீர்?” என்றாள்.

இவ்வாறு தனது வரலாறு கூறிய சீதை அந்த இராவண சந்நியாசியை நோக்கிக் கேட்கிறாள். “இம்மைமறுமை ஆகிய இருவினைகளையும் கடக்க எண்ணித் தவவேடம் தனைக் கொண்டீர். முதுமை மேலிட்டவராகக் காணப்-