பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

திக்குகளைத் தாங்கிய; பேர் ஆற்றல் ஆனைகள்– பேராற்றல் கொண்ட யானைகள்; பூசல் செய்– சண்டை செய்கின்ற; மருப்பினை– தந்தங்களை; பொடி செய்– தூளாக ஒடித்த; தோளினான்– தோளை உடையவன்.

வெம்மை தீர் ஒழுக்கினன்;
        விரிந்த வேள்வியன்;
செம்மையோன்; மன்மதன்
        திகைக்கும் செவ்வியன்;
எம்மையோர் அனைவரும்
        இறைவர் என்று எணும்
மும்மையோர் பெருமையும்
        முற்றும் பெற்றியான்.

தீமையற்ற நல் ஒழுக்கம் உடையவன்; பரந்த வேதங்களை நன்கு ஓதியவன்; செம்மை நெறி பிறழாதவன்; மன்மதனும் வெட்கும் அழகுடையவன்; மும்மூர்த்திகளின் பெருமையுடையவன்.

வெம்மை தீர் ஒழுக்கினன்– தீமையற்ற நல்ல ஒழுக்கம் உடையவன்; விரிந்த வேள்வியன்– விரிவான வேதங்களைக் கேட்டு ஓதி உணர்ந்தவன்; செம்மையோன்– செம்மை நெறி பிறழாதவன்; மன்மதன் திகைக்கும் செவ்வியன்; மன்மதனும் திகைக்கும்படியான அழகுடையவன்; எம்மையோர் அனைவரும்– எவர் எவ்வுலகினராயினும் அவர் அனைவரும்; இறைவர் என்று எணும்– தெய்வம் என்று கருதும்; மும்மையோர் பெருமையும்– மும் மூர்த்திகளின் பெருமையும்; முற்றும் பெற்றியான்– முழுவதும் அமைந்த பெருமையுடையவன்.