பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


கோசலை– கோசலை; உறுதி– நன்மையை; மறத்திலள்‌– மறந்தாள்‌ இல்லை; (அதனால்‌) மைந்தனும்‌– –அவள்‌ மகனும்‌; திருவினில்‌– செல்வத்தில்‌; சிறந்த அரச செல்வத்தைப்‌ பெற்றான்‌; பரதன்‌– பரதனோ; இறந்திலன்‌– சாகவுமில்லை; இருந்தனன்‌– உயிரோடு இருக்கிறான்‌; என்‌ செய்து ஆற்றுவான்‌– என்ன செய்து தன்‌ துயர்‌ போக்கிக்‌ கொள்வான்‌; நீ பெற்றதால்‌– –நீ அவனைப்‌ பிள்ளையாகப்‌ பெற்றதால்‌; பிறந்திலன்‌– பிறவாததற்குச்‌ சமம்‌ ஆனான்‌.

பாக்கியம்‌ புரிந்திலாப்‌
        பரதன்‌ தன்னைப்‌ பண்டு
ஆக்கிய பொலன்‌ கழல்‌
        அரசன்‌ ஆணையால்‌
தேக்கு உயர்‌ கல்‌ அதர்‌
        கடிது சேணிடைப்‌
போக்கிய பொருள்‌ எனக்கு
        இன்று போந்ததால்‌.

பாவம்‌! துரதிர்ஷ்டசாலியான பரதனை கேகய தேசத்‌திற்குப்‌ போகுமாறு தசரதன்‌ ஏன்‌ அனுப்பினான்‌?

அதன்‌ ரகசியம்‌ இப்போதுதான்‌ எனக்கு விளங்குகிறது. இராமனுக்கு முடி சூட்டவே.

பாக்கியம்‌ புரிந்திலா– –அரனாகும்‌ நல்ல பாக்கியம்‌ செய்யாத; பரதன்‌ தன்னை– பரதனை; பொலன்‌ ஆக்கிய கழல்‌ அரசன்‌– பொன்னால்‌ செய்யப்‌ பெற்ற வீரக்‌ கழல்‌ அணிந்த தசரதன்‌; ஆணையால்‌– உத்தரவு பிறப்பித்து; தேக்கு உயர்‌ கல்‌ அதர்‌– தேக்கு மரங்கள்‌ உயர்ந்த மலை