பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


நியாயமற்றவும்‌, முறையற்றவும்‌ ஆகியவற்றை; நினைந்‌தாய்‌ ஆதி– கருதிய குற்றத்துக்கு ஆளாவாய்‌; ஆதலின்‌– ஆதலால்‌; அறிவிலி– அறிவில்லாதவளே அடங்குதி– வாயை மூடு; என்றாள்‌– என்று சொன்னாள்‌ கைகேயி.

(கூனி ஓடவில்லை. நின்று சிறிது சிறிதாகக்‌ கைகேயின்‌ மனத்தை மாற்றினாள்‌)

கூனி போன பின்‌ குல மலர்க்‌
        குப்பை நின்று இழிந்தாள்‌
சோனை வார்‌ குழல்‌ கற்றையில்‌
        சொருகிய மாலை
வான வார்‌ மழை நுழை தரு
        மதி பிதிர்ப்பாள்‌ போல்‌
தேன்‌ அவாவுறு வண்டினம்‌
        அலமரச்‌ சிதைத்தாள்‌.

கூனியின்‌ சதி நன்கு பலித்து விட்டது. கைகேயி மனம்‌ மாறினாள்‌; தன்‌ மலர்‌ படுக்கையை விட்டு இறங்‌கினாள்‌; தன்‌ கூந்தலிலே சூடியிருந்த மலர்‌ மாலையை எடுத்தாள்‌; பிய்த்து எறிந்தாள்‌.

கூனி போன பின்‌– மந்தரை போன பின்பு; குல மலர்க்‌குப்பை நின்று– சிறந்த மலர்க்‌ குவியலாகிய படுக்கையிலிருந்து; இழிந்தாள்‌– இறங்கினாள்‌; சோனைவார்‌ குழல்‌கற்றையில்‌– பெருமழை பொழியும்‌ மேகம்‌ போன்று தனது கரிய கூந்தல்‌ தொகுதியில்‌; சொருகிய– சொருகிக்‌ கொண்‌டிருந்த; மாலை– பூ மாலையை ; வானம்‌ வார்‌ மழை நுழைதரும்‌ மதி பிதிர்ப்பாள்‌ போல்‌– ஆகாயத்திலிருக்கின்‌ற பெரிய கார்கால மேகத்தில்‌ நுழைந்திருக்கின்ற பூரணசந்திரனை சொரிவிப்பவள்‌ போல; தேன்‌ அவா உறுவண்டு இனம்‌– மதுவின்‌ மீதுள்ள ஆசையால்‌ வண்டுக்‌-