பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


இ நிலை – இத் தன்மையதாக; இனையவர் செயல் – சீதை, சடாயு, இராவணன் ஆகியோரின் செயல்களை; இயம்பினாம் – சொன்னோம்; பொன்நிலை மானின் பின் – பொன்னிறம் பொருந்திய மாயமானின் பின்னே; தொடர்ந்து போகிய – அதனைப் பின்பற்றிச் சென்ற; மன் நிலை அறிக என – இராமபிரானின் நிலையை அறிவாயாக என்று; மங்கை ஏவிய – சீதா பிராட்டி ஏவிய; பின் இளையவன் – இளைய பெருமாளாகிய லட்சுமணன் நிலையை; பேசுவாம் – இனிச்சொல்லத் தொடங்குவோமாக

தண் திரைக்கலம் என
       விரைவில் செல்கின்றான்
புண்டரீகத் தடம்
       காடு பூத்து ஒரு
கொண்டல் வந்து இழிந்தன
       கோலத்தான் தனைக்
கண்டனன் மனமெனக்
       களிக்கும் கண்ணினான்.

கடலிலே செல்லும் மரக்கலம் போல விரைந்து சென்றான் லட்சுமணன். நீருண்ட மேகம் ஒன்று தாமரை மலர்கள் அடர்ந்து பூத்துப் பூமியிலே வந்து இறங்கியது என்று சொல்லத் தக்க அழகிய திருமேனியுடன் விளங்கும் இராமனைக் கண்டான்; கண்ணும் மனமும் களி எய்தினான்.

தண் திரைக் கலம் என – தெளிந்த அலைகள் வீசும் கடலிலே செல்லும் மரக்கலம் போல; விரைவில் செல்கின்றான் – வேகமாகச் செல்லும் இலட்சுமணன்; ஒரு கொண்டல் – நீருண்ட மேகம் ஒன்று; புண்டரீகத் தடம்காடு