பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


கூட்டம்; அலமர– சுழலிடும் படும்; சிதைத்தாள்–சிதைத்து எறிந்தாள்;

விளையும் தன் புகழ் வல்லியை
        வேர் அறுத் தென்னக
கிளை கொள் மேகலை சிந்தினள்
        கிண் கிணியோடும்
வளை துறந்தனள்; மதியினில்
        மறுத்துடைப்பாள் போல்
அளக வான் நுதல் அரும்
        பெறல் திலகமும் அழித்தாள்.

வளரும் புகழ்க்கொடியை அறுத்து எறிந்தது போல தனது மேகலாபரணத்தை எடுத்து வீசினாள். காலில் அணிந்திருந்த கிண்கிணியை எடுத்து எறிந்தாள்; கையில் அணிந்திருந்த வளைகளைக் கழற்றி வீசினாள்; நெற்றியில் இருந்த திலகத்தை அழித்தாள்.

விளையும் தன் புகழ் வல்லியை– வளர்கின்ற தனது புகழாகிய கொடியை; வேர் அறுத்து என்ன– வேரோடு அறுத்தால் போல; கிளை கொள் மேகலை– ஒளி பொருந்திய தன் மேகலாபரணத்தை; சிந்தினாள்–சிதறினாள்; கிண்கிணியோடும்– பாத கிண்கிணியோடும்; வளை துறந்தனள்– கைவளைகளையும் எறிந்தாள்-மதியினில்– சந்திரனிடத்தே உள்ள; மறு களங்கத்தை; துடைப்பாள் போல்- அழிப்பவள் போல; அளகவாள் நுதல்- கூந்தலை அடுத்த ஒளி மிகும் நெற்றியில் உள்ள; அரும் பெறல் திலகமும்– பெறுதற்கு அரிதான திலகத்தையும்; அழித்தாள்- துடைத்தாள்.