பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அயோமுகியிதன் பிடியில், தான் சிக்கியதையும் பின்னே அவள் மூக்கை அரிந்து வந்ததையும் இராமபிரானுக்குக் கூறி இதுவே கால தாமதம் ஆனமைக்குக் காரணம் என்றான்.

இராமன் தம்பியைத் தழுவிப் புகழ்ந்து மகிழ்ந்தான். இரவு கழிந்தது. சூரியன் தோன்றினான். இருவரும் நடக்கலாயினர்.

அப்படி நடக்கும் போது கபந்தன் என்றோர் அரக்கன் எதிர்ப்பட்டு இராம லட்சுமணர்களை விழுங்க முற்பட்டான். அப்போது அவ் வீரர் அவனது தோள்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வாறு வீழ்த்திய காலை அவ்வரக்கன் மாண்டு போனான். கந்தருவ உருக் கொண்டு வானில் தோன்றினான்.

“நீ யார்?” என்று வினவினான் இராமன்.

“நான் ஓர் கந்தருவன். தனு வம்சத்தில் தோன்றியவன். முனிவர் ஒருவர் சாபத்தினால் இப் பிறவி பெற்றேன். நின் கை பட்டதால் அச் சாபம் நீங்கிற்று. முன்னைய உருப் பெற்றேன்” என்றான்.

இவ்வாறு கூறிப் பலவாறு இராமனைத் துதித்தான். பின்னே மதங்காசிரமம் சென்று இராமனது வருகைக்காகக் காத்திருக்கும் சபரிக்கு அருள் புரியுமாறு கூறினான்.

பிறகு சபரியிடம் வழி கேட்டு அறிந்து சுக்ரீவனிடம் சென்று, அவனது நட்பைப் பெற்று, சீதா பிராட்டியைத் தேடுமாறு கூறி மறைந்தான்.

வால்மீகி இராமாயணத்திலே பின் வருமாறு காணப்படுகிறது.

கவந்தன் சொல்கிறான் : “ஸ்ரீ ராமா! நான் தனு என்பவன் வமிசத்திலே ஸ்ரீ என்பவனுக்கு மகனாகப் பிறந்தேன். அழகிய வடிவம் பெற்றேன். ஆயினும் கோர