பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

இருக்கும் பூனைகள் அழுதன; இராமன் உருவத்தைக் கண்டிராத சிறு பிள்ளைகள் அழுதன; அவ்விதமிருக்க இராமனை நன்கு அறிந்த பெரியவர் பற்றி என் சொல்ல?

வள்ளல்– வள்ளலாகிய இராமன்; வனம் புகுவான்– காட்டிற்குச் செல்வான்; என்று உரைத்த மாற்றத்தால்– என்று சொல்லக் கேட்ட அக்கணமே; கிள்ளையோடு பூவை அழுத– கிளிகளும் நாகணவாய் பறவைகளும் புலம்பின; கிளர்மாடத்துள் உறையும்– விளங்குகின்ற வீடுகளில் வசிக்கின்ற பூசை– பூனை; அழுத– அழுதன

உரு அறியாப் பிள்ளை அழுத– இராமன் உருவத்தை அறியாத குழந்தைகள் அழுதன; (எனில்) பெரியோரை என் சொல– இராமனை நன்கு அறிந்த பெரியோரைப் பற்றி என்ன சொல்வது?

ஆவும் அழுத; அதன் கன்று அழுத
        அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத
        கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத
        கால் வயப் போர்
மாவும் அழுதன; அம் மன்னவனை
        மானவே.

பசுக்கள் அழுதன; கன்றுகள் கதறின; அன்று அலர்ந்த மலர்கள் கண்ணீர் வடித்தன; நீர் நிலைகளில் உள்ள பறவைகள் அழுதன; தேன் சொரியும் மலர்ச் சோலைகள் அழுதன; யானைகள் அழுதன; காலில் வலுவுடைய