பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சுவை உள்ள– இனிய தின்பண்டங்கள்‌ பல உள; (தூங்குவதற்கு) தொடர்‌ மஞ்சம்‌ போல்‌ பரண்‌ உள– சங்கிலியால்‌ பிணைத்துக்‌ தொங்கவிடப்பட்ட ஊஞ்சல்‌ போன்ற பரண்கள்‌ உள்ளன; வைக– இருப்பதற்கு; புரை உள– குடிசைகள்‌ உள்ளன; (அன்றியும்‌) கடிது ஓடும்‌ கால்கள்‌ உள– விரைந்து ஓடும்‌ சக்தி வாய்ந்த கால்களும்‌ உள்ளன; சிலை பூணும்‌ கை உள–வில்‌ பிடித்த கைகளும்‌ உள; கலிவானின்‌– (நீ விரும்புவது) ஓசை பெற்ற வானத்தின்‌ மேல்‌ உள்ள பொருளேனும்‌; விரைவொடு கொணர்வேமால்‌ கொண்டு வருவேன்‌– விரைந்து கொண்டு வருவேன்‌.

நெறி இடு நெறி வல்லேன்‌;
        நேடினேன்‌ வழுவாமல்‌
நறியன கனி காயும்‌ நறவு
        இவை தர வல்லேன்‌
உறைவிடம்‌ அமைவிப்பேன்‌
        ஒரு நொடி வரை உம்மைப்‌
பிறிகிலென்‌ உடன்‌ ஏகப்‌
        பெருகுவன்‌ எனில்‌ நாயேன்‌.

“நாயேனாகிய நான்‌ உன்னுடன்‌ வரப்‌ பெறுவனேல்‌ பெரு வழியும்‌ சிறு வழியும்‌ அறிந்து சொல்வேன்‌. நல்லகாயும்‌ கனியும்‌ கொண்டு தருவேன்‌. தங்குமிடம்‌ நன்கு அமைப்‌பேன்‌. ஒரு நொடிப்‌ பொழுது உம்மைப்‌ பிரியேன்‌.

ஆகவே என்னையும்‌ உடன்‌ அழைத்து செல்க” என்று வேண்டினான்‌.

நாயேன்‌– தாய்‌ போல்‌ கடைப்‌ பட்டவனாகிய நான்; உடன்‌ ஏகப்‌ பெருவன்‌ எனில்‌– உன்னுடன்‌ வரும்‌ பேறு