பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

பெறுவனாகில்‌; நெறி இடு நெறி வல்லேன்‌ (செல்லுவதற்கு அரிய வழியில்‌) இனிது செல்லுமாறு வழி உண்டாக்கும்‌ திறம்‌ வல்லவன்‌; நறியன— மிகச்‌ சிறந்தனவாகிய; கனி காயும்‌— காய்‌ கனிகளும்‌; நறவு— தேன்‌; இவை—ஆகிய இவைகளை; நேடினேன்‌ வழுவாமல்‌—தேடி தவறாமல்‌ தர வல்லேன்‌; உறைவிடம்‌ அமைப்பேன்‌— வசிப்பதற்கு ஏற்றபடி உறைவிடம்‌ அமைத்துத்‌ தர வல்லேன்‌; ஒரு நொடி வன— ஒரு கணமேனும்‌; உம்மை— உங்களை; பிறிகிலென்‌— பிரிந்து வாழப்‌ பெறேன்‌.

கல்லுவென்‌ மலை மேலும்‌
         கவலையின்‌ முதல்‌ யாவும்‌
செல்லுவென்‌ நெறி தூரம்‌
         செறி புனல்‌ தர வல்லேன்‌
வில்லினம்‌ உளென்‌ ஒன்றும்‌
         வெருவலன்‌ இரு போதும்‌
மல்லினும்‌ உயிர்‌ தோளாய்‌
         மலர்‌ அடி பிரியேனால்‌

“குன்றுகளிலே உள்ள கவலைக்‌ கிழங்குகளைத்‌ தோண்டி எடுப்பேன்‌. நீண்ட வழியாயினும்‌ செல்வேன்‌. மலைமேல்‌ உள்ள தண்ணீர்‌ கொண்டு வருவேன்‌. இரவிலும்‌ சரி பகலினும்‌ சரி, அஞ்சேன்‌. விற்பிடித்த கூட்டம்‌ ஒன்று என்‌ பின்னே உளது எனவே நானும்‌ உன்னுடன்‌ வருவேன்‌. உன்னைப்‌ பிரியேன்‌.”

கவலையின்‌ முதல்‌ யாவும்‌ கவலைக்‌கிழங்கு முதலிய எவ்வகைக்‌ கிழங்கும்‌; மலை மேலும்‌ கல்லுலேன்‌— மலை மேலும்‌ தோண்டி எடுத்துத்‌ தருவேன்‌; நெறி தூரம்‌ செல்லுவேன்‌— எவ்வளவு தூரமாயினும்‌ சென்று; செறி புனல்‌ தர வல்லேன்‌— (உயிர்‌ தங்குவதற்குரிய) தண்ணீர்‌ கொண்டு வந்து தர வல்லேன்‌; வில்‌ இனம்‌