பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மாட்டாரோ! என்று குகன்‌ தன்‌ கூட்டத்தாருடன்‌ பேசிக்‌கொண்டு பரதனின்‌ படைகளை சமாளிப்பதற்கு சித்தமாக நிற்கிறான்‌.

என்‌ ஆருயிர்‌ நாயகன்‌– எனது ஆருயிர்த்‌ தலைவன்‌; அஞ்சன வண்ணன்‌– மை போலும்‌ கரு நிறம்‌ உடைய இராமன்‌; ஆளாமே– அரசு செய்யாமல்‌; வஞ்சனையால்‌– வஞ்சித்து; அரசு எய்திய– ஆட்சியைப் பற்றிய மன்னரும்‌– அரசரும்‌; வந்தாரே– வந்து வட்டாரே; தீ உமிழ்கின்‌றன– தீயினைச்‌ சொரிகின்றனவாகிய; செஞ்சரம்‌ என்பன சிவந்த அம்பு என்பன; செல்லாவோ?– இவர்‌ மீது செல்லமாட்டாவோ? இவர்‌ உஞ்சு போய்விடின– இவர்‌ எனது கணைக்குத்‌ தப்பிப்‌ போய்‌ விட்டால்‌; நாய்‌ குகன்‌– நன்றி கெட்ட நாயாகிய குகன்‌; என்று எனை ஓதாரோ– என்று என்னைச்‌ சொல்ல மாட்டாரோ?


முன்னவன்‌ என்று நினைந்திலன்‌;
        மொய்புலி அன்னான்‌ ஓர்‌
பின்னவன்‌ நின்றனன்‌ என்றிலன்‌;
        அன்னவை பேசானேல்‌
என்‌ இவன்‌ என்னை இகழ்ந்தது?இவ்‌
        எல்லை கடந்துதோ அன்றோ?
மன்னவர்‌ நெஞ்சினில்‌, வேடர்‌
        விடும்‌ சரம்‌ பாயாவோ?

வனம்‌ புகுந்த இராமன்‌ தன்‌ முன்னவன்‌ என்பதனை எண்ணாமல்‌ படையுடன்‌ வந்திருக்கிறானே!

இராமரின்‌ பின்னவனான இலக்குமணன்‌ இருக்கின்‌றான்‌ பாயும்‌ புலி போல என்பதும்‌ எண்ணவில்லை.