பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii


அப்பிண்டத்தை தசரத சக்ரவர்த்தியின் தேவியர் மூவரும் பகிர்ந்து உட்கொண்டனர். நாட்கள் ஓடின. தேவியர் மூவரும் கருத்தரித்தனர். உரிய காலத்தில் தசரதனுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். கோசலைக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இலக்குமணனும், சத்துருக்னனும் பிறந்தனர்.

அரசக் குமாரர்களுக்குரிய வில் வித்தை மற்றும் ஏனைய சாத்திரங்களையும் கற்று, தேர்ச்சி பெற்ற தம் மக்களைக் கண்டு பெரு மகிழ்ச்சியடைந்தான் தசரதன். சில ஆண்டுகளுக்குப்பின் ஒரு நாள் விசுவாமித்திர முனிவர் தசரதனிடம் வந்தார்.

“சித்த வனத்திலே வேள்வியொன்று செய்ய நினைக்கிறேன். அந்த வேள்விக்கு அரக்கரால் இடையூறு வராவண்ணம் காக்க இராமனை என்னுடன் அனுப்புவாயாக!” எனக் கூறினார். மிகுந்த வேதனையுடன் இராமனைப் பிரிந்தான் தசரதன். அண்ணனைத் தொடர்ந்தான் இக்குமணன். இடையூறு விளைவிக்க வேகமாக வந்தாள் தாடகை, முதலில் அவள் பெண் ஆயிற்றே என்று இராகவன் தயங்கினாலும், விசுவாமித்திரர் அவளைப் பற்றிக் கூறிய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டான். ஓர் அம்பு விடுத்தான். வீழ்ந்தாள் தாடகை மகிழ்ச்சியுற்ற முனிவர் படைக்கலங்களைப் பற்றிய இன்னும் பல அரிய விவரங்களைக் கற்பித்தார்.

வழியில் கௌசிகி ஆற்றை கடக்கும்போது, அந்த ஆற்றின் வரலாற்றையும் கூறினார் கௌசிக முனிவர். சித்தாசிரமத்திலே ஆறு நாட்கள் வேள்வி நடந்தது. யாகத்தைப் பாழ்படுத்த வந்தனர் அரக்கர். யாகக் குண்டத்தை அழிக்கப் பல்வேறு உத்திகளைக் கையாண்டனர். இவ்வரக்கர்களுள் முக்கியமானவர்கள் மாரீசன், சுபாகு என்ற தாடகையின் இரு புதல்வர்கள்- இராமன்