பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



ஓதிமம்–அன்னங்கள்; ஒதுங்க– விலகிச் செல்ல; கண்ட– பார்த்த; உத்தமன்– உத்தமனாகிய இராமன்; உழையள் ஆகும்– அருகில் உள்ள; சீதை தன் நடையை நோக்கி– சீதையின் நடையைப் பார்த்து; சிறியது ஓர் முறுவல் செய்தான்– புன்னகை பூத்தான். ஆண்டு வந்து– அங்கே வந்து; நீர் உண்டு– நீர் குடித்து; மீளும்– திரும்பிச் செல்லும்; போதகம்– ஆண் யானை; நடப்ப நோக்கி; – விலகி நடப்பது கண்டு; மாது அவள் தானும்– சீதையும்; புதியது ஓர் புன்முறுவல் பூத்தாள்– (இராமனது நடை கண்டு) இதுவரை இல்லாத புதியதொரு புன்சிரிப்புச்சிரித்தாள்.

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர்
        பல்லவம் அணுங்கச்
செஞ்செவிய கஞ்சம்
        நிமிர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என
        அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என
        வஞ்ச மகள் வந்தாள்.

இவ்விதம் இவர்கள் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது சூர்ப்பணகை வந்தாள்; உள்ளத்திலே வஞ்சக எண்ணம் கொண்டு அழகியதோர் வடிவம் எடுத்து வந்தாள்; விஷம் என்று சொல்லும் படி வந்தாள்; அன்னம்போல நடந்து வந்தாள்; செம்பஞ்சும் குளிர் தளிர்களும் வருந்த செக்கச் செவேல் என்ற சிவந்த தாமரை போன்ற தனது சிறிய அடிகளை எடுத்து மெல்ல மெல்ல வைத்து இளமயில் போல வந்தாள்.

ஒளி விஞ்ச– ஒளி மிகுந்து விளங்கும்; பஞ்சி– செம் பஞ்சும்; குளிர் பல்லவம்– குளிர்ச்சி தரும் இளம் தளிர்களும்;