பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பாற்கடலில் ஒளிந்துக் கொண்டானே, சிவனோ? அவன்தான் கயிலையில் இருக்கிறானே.

பின் எவராயிருப்பர்?

சிலர்–சில அரக்கர்; புரந்தரன்–இந்திரன்; போர் இலான்–போர் செய்ய முடியாது தோற்றுப்போய்; ஏவல் பூண்டான்–இராவணன் ஏவல் செய்கிறான்; ஆர் உலாம்–கூரிய; நேமியான்–சக்கரம் உடைய திருமால்; ஆற்றல் தோற்றுப் போய்–போரிலே தோற்று வலிவிழந்து; நீரினான்–கடலில் புகுந்து கொண்டான்; நெருப்பினான்–தீயுமிழ் கடவுளாகிய சிவபெருமான்; பொருப்பினான்–கையிலங்கிரியிலேயுளான்; ஈது–இவ்வாறு மூக்கை அறுத்தவர்; யார் கொல்–யாவராயிருக்க முடியும்? என அறைகின்றனர்–என்று ஒருவரை மற்றொருவர் வினவுகின்றனர்.

முழவினில், வீணையில் முரல்
        நல் யாழில்
தழுவிய குழலினில் சங்கில்
        தாரையில்
எழு குரல் இன்றியே
        என்றும் இல்லது ஓர்
அழுகுரல் பிறந்தது அவ்
        இலங்கைக்கு அன்று அரோ.

அன்றையதினம் இலங்கையிலே ஓர் அழுகுரல் தோன்றியது. வீணையின் நாதமும் யாழின் மெல் ஓசையும், முழவின் முழக்கவும், குழலின் ஓசையும் எல்லாம் ஓய்ந்தன; ஓய்ந்தன, ஓய்ந்தே போயின!