பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அழிப்பர்– அழிக்க வல்லவர்; வில்லால்– வில் வலிமையினால்; ஓர் இமைப்பில்– கண் மூடிக் கண் திறக்கும் முன்; உலகு ஏழின்– ஏழு உலகங்களின்; நல் மதன்– சிறந்த வலியை; அழிப்பர்– அழிப்பார்கள்; அதனை இப்பொழுது இசைப்பது ஏன்?– அதனை இப்பொழுது எவ்வாறு எடுத்து இயம்புவேன்?

மருந்து அனைய தங்கை
        மணி நாசி வடிவாளால்
அரிந்தவரும் மானிடர்
        அறிந்தும் உயிர் வாழ்வார்
விருந்து அனைய வாளொடும்
        விழித்து இறையும் வெள்காது
இருந்தனன் இராவணனும்
        இன் உயிர் கொடு இன்னும்

ஒரே ஒரு தங்கை; எஞ்சியிருக்கிறாள்; தேவாமிர்தம் போல் கிடைத்தற்கு அரியவள், அவளது மூக்கை அரிந்துவிட்டனர். அரிந்தவரோ மானிடர். அவரோ இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்;

சிவபெருமான் அளித்த சந்திரஹாஸம் எனும் வாளை வைத்துக்கொண்டு, இது வரை அதை உபயோகிக்காமல் போற்றி வைத்து, இராவணன் என்பவன் இன்னமும் இருக்கிறான்.

இவ்வாறு இராவணன் தன்னைப் படர்க்கையில் பழித்து கொண்டான்.

மருந்து அனைய– தேவாமிர்தம்போல் கிடைத்தற்கு அரிய; தங்கை– தங்கையாகிய சூர்ப்பணகையின்; மணி நாசி– அழகிய மூக்கினை; வடிவாளால்– கூரிய தம்