பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

காவலாய் நின்ற; கரனே முதலினோர்– கரன் முதலாக உள்ள; நிருதர்– அரக்கர்; வன்துணை இலா– வலிய துணை இல்லாத; இருவர் மானிடரை– இருவரே ஆக உள்ள அம் மனிதரை; வாளால்–தமது வாளினால்; கொன்றிலர்களா– கொன்றாரில்லையா? என்றான்– என்று கேட்டான்.

அற்று அவன் உரைத்த லோடும்
        அழுது இழி அருவிக் கண்ணாள்
எற்றிய வயிற்றள், பாரினிடை
        வீழுந்து ஏங்குகின்றாள்
“சுற்றமும் தொலைந்தது ஐய!
        நொய்து” எனச் சுமந்த கையள்
உற்றது தெரியும் வண்ணம்
        ஒரு வகை உரைக்கலுற்றாள்

அப்படி அவன் கேட்ட உடனே கண்களிலிருந்து அருவி போல் நீர் பொழிந்து கொண்டு, வயிற்றிலே அடித்துக் கொண்டு தரையிலே கிடந்து புரண்டு அழுது கொண்டிருந்த சூர்ப்பணகை, தலைமீது இருகைகளையும் வைத்துக்கொண்டு “நம் சுற்றம் தொலைந்தது ஐயா!” என்று அலறினாள். கானிலே நிகழ்ந்தவற்றை ஒருவாறு உரைக்கலானாள்.

அற்று அவன் உரைத்தலோடும்– அவ்வாறு இராவணன் கேட்ட அளவில்; அழுது இழி அருவி கண்ணாள்– அழுது வீழ்கின்ற அருவி போன்று நீர் சொரியும் கண்ணினள் ஆகியவளும்; எற்றிய வயிற்றள்– தனது இரு கைகளாலும் வயிற்றிலே அடித்துக் கொண்டவளும்; பாரின் இடை வீழ்ந்து– பூமியிலே விழுந்து; ஏங்குகின்றாள்– அழுது புரண்டு வருந்துகின்றவளும் ஆகிய சூர்ப்பணகை (அவனை