பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

முதலான வீரக் காளைகள்; எல் ஒன்று– சூரியனுடைய கிரணங்கள் பட்ட; கமலம்– தாமரைப் போல்; செங்கண்– சிவந்து ஒளிரும் கண்களை உடைய; இராமன் என்று இசைத்த– இராமன் எனும் பெயர் கொண்ட; ஏந்தல்– பெருமைமிக்க ஒருவனது; வில் ஒன்றில்– ஒரே வில்லால்; கடிகை மூன்றில்– மூன்றே நாழிகை அளவில்; விண்ணில் ஏறினர்– விண்ணுலகு புகுந்தனர்; என்றாள்.

ஆயிடை எழுந்த சீற்றத்து
        அழுந்திய துன்பம் ஆழித்
தீயிடை உருக்கும் நெய்யில்
        சீற்றத்துக்கு ஊற்றம் செய்ய
“நீ இடை இழைத்த குற்றம்
        என்னை கொல்? நின்னை இன்னே
வாயிடை இதழும் மூக்கும்
        வலிந்து அவர் கொய்ய” என்றான்.

அந்த மானிடர் இவ்வாறு உன் மூக்கையும், உதடுகளையும் அரியும் படியாக நீ அவர்களுக்குச் செய்த குற்றம் என்ன? என்று கேட்டான் இராவணன். யாரை நோக்கி? சூர்ப்பணகையை நோக்கி.

அ இடை– அப்பொழுது இராவணன்; எழுந்த– பொங்கி எழுந்த; சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி– கோபத்தில் அழுந்திய தன் துன்பம் மாறுபட்டு வேறாகி; தீ இடை உகுத்த நெய்யில்– நெருப்பிலே வார்த்த நெய்போல; சீற்றத்துக்கு ஊற்றம் செய்ய– தான் கொண்ட கோபத்திற்கு வலியை உண்டாக்க; அவர்– அந்த மானிடர்; நின்னை– உன்னை; இன்னே– இவ்விதமாக; வாய் இடை