பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

இதழும் மூக்கும்– வாயிடமான உதடும் மூக்கும்; வலிந்தனர் கொய்ய– வலிந்து அரியும்படியாக; நீ இடை இழைத்த குற்றம் என்? – நீ அவரிடம் செய்த குற்றம் யாது? என்றான்– என்று கேட்டான்.

“என் வயின் உற்ற குற்றம்
        யாவர்க்கும் எழுத ஒண்ணாத்
தன்மையன் இராமனோடும்
        தாமரை தவிரப் போந்தாள்
மின் வயின் மருங்குல் கொண்டாள்
        வேய் வயின் மென்தோள் கொண்டாள்
பொன் வயின் மேனி கொண்டாள்
        பொருட்டினால் புகுந்தது” என்றாள்.

நீ செய்த குற்றம் என்ன? என்று கேட்ட இராவணனுக்குப் பதில் சொல்கிறாள் சூர்ப்பணகை. என்ன சொல்கிறாள்? “ஓவியற்கு எழுத ஒண்ணா உருவத்தனாகிய இராமன்பால் பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளோ! தாமரை மலரை நீங்கி வந்த திருவினாள்; மின்னல் போலும் இடையுடையாள்; மூங்கில் போலும் மெல்லிய தோள் உடையாள்; பொன் போன்ற மேனியாள்; அவள் பொருட்டால் விளைந்தது” என்றாள்.

(அது கேட்ட சூர்ப்பணகை) என்வயின் உற்ற குற்றம்– என்பால் ஏற்பட்ட தவறு (யாது எனில்); யாவர்க்கும் எழுத எண்ணாத– சித்திரக்கலை வல்லார் எவர்க்குமே எழுத முடியாத; தன்மையன்– சிறப்பு அமைந்த; இராமனோடும்– அந்த இராமனோடும்; தாமரை தவிரப் போந்தாள்–