பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189



"வாலியின் மகனாகிய அங்கதன் அனுப்பிய தூதனே! வலிமை மிக்க வாலி நலமா? அவனது அரச வாழ்க்கை நன்கு நடைபெறுகிறதா?" என்று விசாரித்தான்.

அவ்விதம் விசாரிக்கவே இராமதூதன் இயம்பலுற்றான்.

***

என்றலும் - என்று அநுமன் சொன்ன உடனே; இலங்கை வேந்தன் - இலங்கை அரசனாகிய இராவணன்; எழிலி நாப்பண் - மேகத்தின் நடுவே; மின் திரிந்தது என்ன - மின்னல் பளிச்சிட்டது போல; எயிற்றினம் - பல் வரிசை தோன்ற; நக்கு - சிரித்து; வாலி சேய் விடுத்த தூத - வாலியின் மைந்தனாகிய அங்கதன் விடுத்த தூத வன்திறல் ஆய வாலி - மிக்க வலிமையுடைய வாலி; வலியன் கொல் - உடல் வலிமையுடன் நலமாயிருக்கிறானா? அரசின் வாழ்க்கை நன்று கொல் - அவனது அரசு நன்கு நடைபெறுகிறதா? என்னலோடும் - என்று கேட்ட அளவில்; நாயகன் தூதன்- இராமதூதன்; நக்கான் - இயம்பலுற்றான்.

***

திக் விஜயம் செய்து யாவரையும் போரில் வென்றான் இராவணன்; வாலியுடன் போர் செய்யக் கருதினான். வாலி இருந்த கிட்கிந்தை சென்றான்; அப்பொழுது வாலி அங்கே இல்லை; நான்கு கடலிலும் நீராடி நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்யச் சென்றிருந்தான் வாலி இருந்த இடம் தேடிச் சென்றான் இராவணன். தெற்குக் கடற்கரையிலே வாலியைக் கண்டான். அப்போது வாலி தியானத்தில் இருந்தான். வாலி அறியாமல் அவன் பின்னே சென்று கட்ட எண்ணி மெதுவாக ஓசை செய்யாமல் போனான்; அவன் தன் வால் அருகே வந்ததும் அந்த வாலினாலேயே அவனைச் சுற்றி அவனையும் தூக்கிக் கொண்டு வான வீதி வழியே மற்றைய கடல்களுக்கும் சென்று தன் கர்மானுஷ்டானங்களை முடித்துப் பின் தன் நகரடைந்து இராவணனை கீழே அவிழ்த்துவிட்டான் வாலி. அதற்குள் மிகத்-