பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

கீழ்மையும் - தாழ்வும்; மீக்கொள - நம்மேல் வந்து ஓங்க; கிளையொடும் - சுற்றத்தோடு; மடியாது - அழிந்திடாது; அசைவு இல் கற்பின் - நீங்காத கற்புடைய; அவ்வணங்கை- அந்தத் தெய்வ மகளாகிய சீதையை; விட்டு அருளுதி - விட்டு விடுவாயாக; இதன் மேல் விசையம் இல் - இதற்கு மேல் வெற்றிதரும் செயல் வேறு ஒன்றுமில்லை; என்று சொல்லினான் அறிவில்மிக்கவன்.

***

விபீடணன் தன் அண்ணனின் கோபத்தைக் கண்டு அஞ்சவில்லை. தொடர்ந்து முயற்சிக்கிறான். இரணியனின் கதையைச் சொல்லி அவன் மனத்தை மாற்றப்பார்க்கிறான்.

இரணியன் கதையைச் சொல்வானேன்? இரணியனும் ஓர் அரக்கன். தேவர், மானிடர் யாராலும் தனக்கு முடிவு ஏற்படக் கூடாதென்று வரம் பெற்ற வலிமை மிக்கவன். "தானே தெய்வம்" என அனைவரையும் அச்சுறுத்தி வாழ்ந்தவன். அவன் மகன் பிரகலாதன். திருமாலின் பக்தன்; தந்தை மகனுக்குப் பகையானான். "எங்கே உன் நாராயணன்? என்று மிரட்டிய தந்தைக்கு 'தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்' எனக் கூறிய சிறுவனின் பதில் சினத்தைத் தூண்டியது. தூணை உடைத்தான். உடைத்த தூணிலிருந்து வெளிப்பட்டான் சிங்கப் பெருமாள், இரணியனைக் கொன்றான்.

இதே போன்று வரம் பெற்றுவிட்டதால், மறத்தை நிலைக்க செய்ய முடியாது. எந்த வரத்திற்கும் ஒரு விலக்கு உண்டு. எனவே சீதையை இராமனிடம் அனுப்பி நாட்டையும் வீட்டையும் காக்கவேண்டும் என்று மன்றாடுகிறான் விபீடணன்.

ஆனால், இராவணன் என்ன சொல்கிறான்?

விபீடணனைத் திட்டுகிறான். பகைவன் இராமனிடம் அவன் அன்பு கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறான். பிரகலாதனைப் போல் விபீடணனும் மாற்றானுடன்