பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239

தருமமோ? அன்றி நீதியோ? (இரண்டுமில்லை) மேலும் நேர்மைப் பண்பு இரண்டும் இல்லாத அரக்கர்களில் சிறப்புடையவர் எவருளர்? (எவருமிலர்)

(இங்கு சுக்ரீவன் வாலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பகையையும் விபீடணனுக்கு அவன் உடன்பிறப்புடன் ஏற்பட்ட பகையையும் ஒப்பிடுகிறான்.)

***

(இந்த விபீடணன் இச் சமயத்தில்) ‘தம்முனை துறந்தது - தன் தமையனான இராவணனை விடுத்து வந்தது; வெம்முனை விளைதலின் அன்று - தமையனோடு கடும்போர் நிகழ்ந்ததால் அன்று: வேறு ஒரு சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று - பிறிதொரு சுமையால் தன் உயிரையே கொள்வதற்குத் துணிவு கொண்டதாலும் அன்று; (ஆதலின் இவன் செயல்), தரும நீதியோ - அறநெறியாகுமோ? செம்மை இல் அரக்கரில் , சீரியோர் யாவர் - நடுவு நிலைமை முதலிய நேர்மைக் குணங்கள் அற்ற அரக்கர் குழுவில் மேன்மை உடையவர் என்று புகலற்குரியவர் யாவர் - யார்? (யாருமில்லை என்றபடி).

***

இராமன் சாம்பனை விபீட்ணன் பற்றிய கருத்தைக் கேட்டபோது சாம்பனும், ‘பகைவராகி நம்மை வந்தடைந்து உள்ள இவர்கள்பால் நற்குறிகள் மிகக் காணப்படுகின்றன என்பது கொண்டு இவர்களை ஏற்றுக் கொள்வதை உலகம் நன்றென ஒப்புமோ?’ என்றான். நீலனும் மற்றவரும் விபீடணனுக்கு புகலிடம் கொடுத்து ஏற்றுக்கொள்வது தீதென தீர்மானமாகக் கூறினர்.

***

‘உறு பொருள் யாவரும்
       ஒன்றக் கூறினார்
செறி பெருங் கேள்வியாய்!
       கருத்து என்? செப்பு’ என,