பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245


ஆதலான் - ஆகையால்; அபயம் என்ற பொழுதத்தே - அபயம் என்ற என்னை வந்து சார்ந்த அப்பொழுதே; கடப்பாடு என்பது - கடமை என்ற சொல்லப்படுவது; அபயதானம் ஈதலே - வந்தவர்க்கு அபயதானம் அளிப்பதேயாகும்; என்பால் வைத்த காதலால் இயம்பினீர் - நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பினால் (இவனை ஏற்பது சிறிதும் பொருத்தம் அன்று என்று) சொன்னீர்கள்; இனி வேறு எண்ணக் கடவது என் - இனிமேல் (இந்த வீடணனை ஏற்பதில்) வேறாக ஆலோசிக்க வேண்டியது யாதுளது? ‘கதிரோன் மைந்த - சூரியன் புதல்வனான சுக்கிரீவ! கோதிலா தவனை நீயே என் வயின் கொணர்தி என்றான் - குற்றமற்ற அந்த வீடணனை நீயே என்னிடம் அழைத்து வருக.’ என்று சொன்னான் இராமபிரான் .

***

சுக்ரீவன் விபீடணனை அழைத்து வந்தான் அண்ணலிடம். “உனக்கு அபயம் வழங்கின இராமபிரானை வணங்குக!” என்று கூறினான். வீடணனும் இராமனை வணங்க, இராமன் அவனுக்கு இருக்கை ஈந்தான்.

***


‘அழிந்தது பிறவி’ என்னும்
       அகத்து இயல் முகத்துக் காட்ட,
வழிந்த கண்ணீரின் மண்ணில்
        மார்பு உற வணங்கினானைப்
பொழிந்தது ஓர் கருணை தன்னால்
        புல்லினன் என்று தோன்ற,
“எழுந்து, இனிது இருத்தி” என்னா
        மலர்க்கையால் இருக்கை ஈந்தான்.

இவ்வாறு இராவணனால் துரத்தப்பட்ட விபீடணன் இராமனைச் சரண் அடைந்தான். கண்கள் நீர் சொரிய