பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மண்ணில் விழுந்து வணங்கினான். வணங்கிய விபீடணனைக் கருணையோடு பார்த்து மலர்க்கையால் இருக்கை தந்தான் இராமன்.

***

பிறவி அழிந்தது - இனிப் பிறப்பெடுக்கும் தொல்லை ஒழிந்தது; என்னும் அகத்து இயல் - என்கின்ற அக எண்ணம்; முகத்துக் காட்ட வழிந்த கண்ணீரான் - ஆனந்தக் கண்ணீர் சொரியும் விபீடணன்; மண்ணில் மார்புஉற வணங்கினான் - தன் மார்பு தரையிலே கிடக்க வணங்கினான்; (இராமன்) பொழிந்தது ஓர் கருணை தன்னால் - சுரந்து வழியும் கருணையினால்; புல்லினன் என்று தோன்ற - தழுவினன் என்று சொல்லும்படி; எழுந்து - எழுத்திருந்து; இனிது இருத்தி என்னா - இனிதே அமர்வாயாக என்று கூறி; மலர்க் கையால் - தாமரை மலர் ஒத்த தனது திருக்கரங்களால் இருக்கை தந்தான்.

***

அத்துடனன்றி, ஏதுமின்றி வந்த வீடணனுக்கு இன்னும் ஒரு பெரிய பதவியையும் அளித்தான் கருணாமூர்த்தி.

அது யாது?

***

ஆழியான் அவனை நோக்கி,
       அருள் சுரந்து, உவகை கூர
“ஏழினொடு ஏழாய் நின்ற உலகும்
       என்பெயரும் எந்நாள்
வாழும் நாள் அன்று காறும்,
       வளை எயிற்று அரக்கர்வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம்
       நின்னதே தந்தேன்” என்றான்.