பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257

அப்புறத்தில், இரவியும் மறைய போனான் - சூரியனும் மறையும்படி சென்றான்.

***

எழுபது வெள்ளம் வானரப் படையோடு இலங்கையை முற்றுகையிட்டான் இராமன். இராவணனின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு வடக்கு வாயிலில் காத்திருந்தான். இராவணன் வரவேயில்லை. “ஒருவேளை இராவணன் மனம் மாறி, சீதையை இப்போதாவது கொடுக்க நினைத்தால், கொடுத்து விடட்டும். இல்லா விட்டால் இருக்கவே இருக்கிறது, போர்!” எனக்கருதி, அமைதியாக சிந்திக்கலானான்.

இராவணனின் மனம் திருந்தியிருப்பின், உடன் செயல்படுவதற்கான வழிமுறைகளைச் சிந்தித்தான். அவைகளிலொன்றை விபீடணனிடமும் கூறினான். அது என்ன? “இப்போதவாது சீதையைக் கொடுப்பாயா?” என்று இராவணனை கேட்டு தூது அனுப்புவோம். இப்போதும் மறுத்தால், போருக்குச் செல்வோம் என்றான்"

இக்கருத்தை விபீடணனும் சுக்ரீவனும் ஆதரித்தனர். ஆனால் இளையவனோ, “எப்போதும் எல்லோரிடமும் இரக்கம் காட்டுவது தகுதியன்று; நாம் இவ்வளவு தூரம் வந்தபிறகு இனி சமாதானத்தைப்பற்றி கருதுவது சரியல்ல. அம்பைச் செலுத்திப் பகைவனை வெல்வதைத் தவிர, ஆலோசிக்க வேண்டுவது ஒன்றுமில்லை!” என்றான். தன் கூற்றை வலியுறுத்தும்படியாக இராவணன் செய்த முறைக் கேடுகளை எல்லாம் கூறினான். இத்தகையவனுடன் வலிய சமாதானம் பேசலாமோ? அதுவும் போகட்டும். ஒரு வேளை இராவணன் நம் கருத்தினை ஏற்றுவிட்டால், விபீடணனுக்கு இலங்கை அரசை கொடுப்பதாக அளித்த வாக்கு என்னாவது? தண்டகாரண்யத்தில் அரக்கரை கொல்வதாகச் சொல்லி இருடியர்க்கு அபயம் கொடுத்தோமே அது

கி.—17