பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267

கொன்றவன் பின்னால்; இருகை தலை சுமந்து நாற்றி - தன் இரு கைகளையும் தலைமேல் குவித்துக் கொண்டு; பேதையன் - அறிவிலி; என்ன - என்று; (உலகத்தார் பழிக்கும் வண்ணம், வாழ்ந்தாய் என்பதோர் பிழையும் தீர்ந்தாய்- என்று சொல்லப்படுகிற குற்றமும் நீங்கப் பெற்றாய்; சீதையைப் பெற்றேன் - சீதையைப் பெற்று விட்டேன்; இனி - இனிமேல்;உன்னைச் சிறுவனுமாகப் பெற்றால் - உன்னை எனது மகனாகவும் அடையப் பெறுவனேல்; எனக்கு அரிது ஏது என்றான் - இந்த உலகிலே நான் அடைய இயலாத அரியது எது? என்றான்.

***

‘அந்நரர் இன்று, நாளை,
        அழிவதற்கு ஐயம் இல்லை;
உன்னரசு உனக்குத் தந்தேன்;
        ஆளுதி ஊழிக்காலம்:
பொன் அரி சுமந்த பீடத்து
        இமையவர் போற்றி செய்ய,
மன்னவனாக, யானே
        சூட்டுவன்,மகுடம்’ என்றான்.

“அந்த மானிடர் இன்றோ அல்லது நாளைக்கோ அழியப் போகிறார்கள். அதில் சிறிதும் ஐயம் வேண்டாம். உனது அரசை உனக்கே நான் தந்தேன். ஊழிக் காலம்வரை பொன்னால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து, வானவர் உன்னைத் தொழ மன்னவனாக ஆளுதி. யானே நினக்கு மகுடம் சூட்டுவேன்!” என்றான்.

***

அந்நரர் - அந்த மானிடர்; இன்று நாளை - இன்றோ நாளையோ; அழிவதற்கு-இறந்து போவதில்; ஐயம் இல்லை - சந்தேகம் இல்லை; உன் அரசு உனக்குத் தந்தேன் - உனது