பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269

காலமே; என்பது உன்னி - என்பதை அறிந்து; உம்பி - உனது தம்பியாகிய விபீடணன்; நுங்கள்பால் நின்று எம்பால் போந்தனன் - உங்களைவிட்டு நீங்கி எங்கள்பால் வந்து விட்டான்; என்றான்

***

வாய் தரத்தக்க சொல்லி
        என்னை உன்வசம் செய்வாயேல்
ஆய்தரத்தக்கது அன்றோ
        தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வேன் யானே இதற்கு
        இனி நிகர் வேறு எண்ணில்
நாய் தரக் கொள்ளும் சீயம்
        நல்லரசு என்று நக்கான்.

தூதனாக வந்த அங்கதன் மேலும் சிரித்தான். கைகொட்டி சிரித்துக்கொண்டே கூறினான்:

“ஆகா! எப்படி? நீ, எனக்கு அரசு தருவாய். நானதை ஏற்கவேண்டும். தூதனாகச் சென்ற நான் மாற்றான் வார்த்தைகளுக்கு மயங்கி, (இராமனுக்கு) வேறுபட்டேன் ஆகில், எனக்கு பெரும் பழி வராதோ? அதுவும் போகட்டும். உன்னிடம் அரசு பெறுவது எதைப் போலிருக்கும் தெரியுமா? நாயிடம் இருந்து அரசு பெற்றது போல (இழிவாக) இருக்கும்!” என்றான் ஏளனமாக.

***

வாய்தரத்தக்க சொல்லி - வாயில் வந்தவைகளை எல்லாம் சொல்லி; என்னை உன் வசம் செய்வாயேல் - உன் பக்கம் சேர்த்துக் கொள்வாயானால்; தூது வந்து அரசது ஆள்கை - தூதனாக வந்து அரசாட்சி ஏற்பது; ஆய்தரத் தக்கது அன்றோ - பெரியவர்களால் ஆராயத் தக்கது அல்லவா! நீ தரக் கொள்வேன் யானே - ஆட்சியை