பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294



கடல் முதலியன நிலைக்குலைந்தன; காற்று பேரிரைச்சலோடு வீசிற்று. இதைக் கண்ட சாம்பவான் அநுமன் வந்திட்டானென்று சொல்லுமுன்னரே, மாருதி மருத்து மலையை வேருடன் பறித்துக்கொண்டு வான வழியாய் வந்தான். அம் மலையோ வஞ்சகருடைய ஊரிலே இறங்க உடன்படவில்லை. எனவே வானிலே நின்றது. அதன் மீது வீசிய காற்று லட்சுமணனையும், மற்றவரையும் உயிர்த்து எழச் செய்தது.

***

தோன்றினன் - வந்துவிட்டான்; (அநுமன்) என்னும் - என்ற; அ சொல்லின் - அந்தச் சாம்பன் சொல்லிய சொல்லுக்கு; முன்னம் வந்து, நிலத்து அடி ஊன்றினன் - தரையில் காலை அழுந்த வைத்தவனாய்; அநுமன் எய்தினன் - மாருதி வந்தடைந்தான்; வஞ்சர் ஊர் வர என்றிலது ஆதலின் - வஞ்சக அரக்கரின் ஊர்க்கண் வருவதற்கு மனம் கொள்ளாமையின்; கடவுள் ஓங்கல் வான் தனில் நின்றது - தெய்வத் தன்மை வாய்ந்த அந்த மருத்து மலை விண்ணிலேயே நின்றது.

***

அநுமனை வாழ்த்தினான் அண்ணல். சாம்பவானின் வேண்டுகோளின்படியே அம் மலையை முன்னிருந்த இடத்திற்கே எடுத்துச்சென்றான் அநுமன்.

லட்சுமணன் ஆகியோர் உயிர்ப் பெற்று எழுந்ததை அறியாத அரக்கர் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உயிர்தெழுந்தவுடன் வானரர் செய்த ஆரவாரம் அவர்கள் களியாட்டத்தை ஒடுக்கியது. இராவணன் வெறுப்புற்று, மந்திராலோசனை செய்ய கிளம்பினான். இராவணன் நடந்தவற்றை கூறியபோது, மாலியன் அவனை ‘சீதையை விட்டு விடுதல் நலம்’ என்று அறிவுரைக் கூறினாலும் இராவணன் செவிசாய்க்க மறுத்தான். இந்திரசித்து தான் நிரும்பிலைக்குப் போய் யாகஞ்செய்தால், நிச்சயம் பகைவரை வெல்ல