பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

329

இருந்தும் அகன்றன; இராமற்கு - இராமபிரானுக்கு; வலியும் வீரமும் - வன்மையும் ஆண்மையும்; மிக்கன் - அதிகரித்தன.

சரிசமமான பலமுடைய இருவர் போரிடுகையில், எதிரி சிறிது சளைக்கக் கண்ட அளவில் மாற்றானுக்கு உற்சாகம் நிகழ்வது இயல்பு. இராவணன் தளர்ச்சியால் இராமற்கு லலியும் வீரமும் மிக்கன.

***


வேதியர் வேதத்து மெய்யன்
        வெய்யவர்க்கு
ஆதியன் அணுகிய அற்றம்
        நோக்கினான்
சாதியில் நிமிர்ந்தது ஓர்
        தலையைத் தள்ளினான்
பாதியின் மதிமுகப் பகழி
        யொன்றினால்

ஆணவத்துடன் நிமிர்ந்து நின்ற இராவணனது தலையை இராமன் அறுத்தான். அது கடலில் போய் விழுந்தது. என்றாலும் அந்தத் தலை மீண்டும் முளைத்தது. இராமனை திட்டி அதட்டியது.

***

வேதியர் வேதத்து மெய்யன் - அந்தணர்கள் ஓதுகின்ற நான்மறையின் உண்மைப் பொருளான இராமபிரான்; வெய்யவர்க்கு - தீயவர்களான அரக்கர்க்கு; ஆதியன் - முதல்வனான இராவணன்; அணுகிய அற்றம் நோக்கினான். கிட்டிய சமயம் பார்த்து; (இதுவே அரக்கன் தலையைத்