பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346


சீதை லட்சுமணனை நோக்கினாள். தீ யமைக்கச் சொன்னாள். இராமனும் இதற்கு அனுமதி தந்தான். பிராட்டியின் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்த வருத்தந் தோய்ந்த வார்த்தைகள் உலகையே ஆட்டி வைத்தன. இலட்சுமணனும் தீ மூட்ட, பிராட்டி அதன் அருகில் சென்றாள். தீயில் புகும் பொருட்டு அக்கினியை வலம் வந்த போது உலக சிருட்டிகளெல்லாம் ஓலமிட்டன. அது எப்படி இருந்தது? இந்தக் கோபம், தகுதியல்லாதது என்று சொல்லியது, போலிருந்தது. தேவர் நடுங்கினர், உயிர்கள் துடித்தன; கடல்கள் பொங்கி எழுந்தன; இயற்கை தன்னிலை மாறி தவித்தது.

***

கனத்தினாற் கடைந்த பூண்
        முலைய கைவளை
மனத்தினால் வாக்கினான் மறு
        உற்றேன் எனின்
சினத்தினால் சுடுதியாற்றிச்
        செல் வாவென்றான்
புனத்துழாய்க் கணவற்கும்
        வணக்கம் போக்கினாள்.

சீதை அங்கியக் கடவுளை வணங்கினாள்.

‘நான் கற்பு குறையுடையேன் ஆயின் என்னைச் சுடுக’ என்று தொழுதாள். “மனத்தாலோ, மொழியாலோ நான் களங்க முற்றவள் எனின் என்னை கோபத்தினால் சுட்டெரிப்பாயாக!” என்று சொல்லி, இராமனையும் வணங்கினாள்.

***

(அப்பொழுது), கனத்தினால் கடைந்த பூண் - பொன்னால் அராவிச் செய்யப்பட்ட அணிகலம் புனைந்த; முலைய -