பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

349

இவளை - நீ இந்தச் சீதாதேவியை; யாதும் ஓர் பழிப்பிலள் - எந்தவிதமான குற்றம் இல்லாதவள்; என்றனை - என்று பகர்ந்தாய்; பழியும் இன்று - எனவே (இவளிடம் எவ்வகைப்) பழியும் இல்லை; இனி கழிப்பிலள் - இனி (இவள்) நீக்கத்தக்கவள் அல்லள்; என்றனன் - என்று கூறினன்.

***

இராமபிரான் பரதனைச் சந்திக்கும் காலம் வந்ததை அறிந்தான். அயோத்திக்குச் செல்ல விபீடணன் கொண்டு வந்த புட்பக விமானத்தில் பிராட்டியுடனும் இளையவன் உடனும் ஏறுகிறான். விபீடணனையும், சுக்ரீவனையும், அநுமனையும், அங்கதனையும் மற்றைய எல்லோரையும் தத்தம் ஊருக்குச் செல்ல கூறியபோது, அவர்கள் இராமபிரானின் முடிசூட்டு விழாவைக் காண விரும்புவதாகக் கூறுகின்றனர். இராமன் மகிழ்கிறான். வானரர் அனைவரும் மனித வடிவங் கொள்கின்றனர். அவர்களும் விமானம் ஏறி வருகின்றனர். வடக்கு நோக்கிச் செல்கையில் ஒவ்வோர் இடத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறிக் கொண்டே செல்கின்றனர். அநுமனை சுக்ரீவன் வானர மகளிரை அழைத்து வருமாறு பணிக்கிறான். அவர்களையும் அழைத்து வருகிறான் அநுமன். தண்டகவனம், சித்திரக் கூடம், பாரத்துவாச ஆசிரமம் ஆகியவைகளைக் கடக்கும்போது, பாரத்துவாச முனிவர் இராமனை எதிர்கொண்டு தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அம் முனிவர் பரதனைப் பற்றி கூறுகிறார்.

இராமன் மாருதிக்கு ஒரு அரிய பணியைச் செய்யும்படி கூறுகிறான்.

இன்று நாம்பதி வருது முன்
        மாருதி யீண்டச்
சென்று தீதின்மை செப்பியத்
        தீயவித் திளையோன்