பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

355


நந்திக் கிராமத்தை அடைந்த இராமன் தன் சடா முடியை கழிக்கின்றான். சரயூ நதியில் நீராடி அலங்காரம் செய்துக்கொள்கிறான், தம்பியர் செய்யும் ஒப்பனையை புன்சிரிப்புடன் ஏற்கிறான்.

***

நம்பிய - தன்னிடம் விசேடப் பற்றுள்ள; பரதனோடு - பரதனுடனே; மற்றைத் தம்பியரோடு - மற்றைத் தம்பியரும்; தானும் - தானுமாக; நந்தி அம்பதியை நண்ணி - நந்திக் கிராமமாகிய அழகிய நகரத்தை அடைந்து; வம்பு அலர் சடையும் மாற்றி - நறுமணம் கமழ்கின்ற சடையைக் கழித்து; மயிர் வினை முற்றி - மயிர் கழிக்கும் செயலையும் முடித்து; சரயுவின் புனலிற் தோய்ந்து - (சரயூ நதியின்) நீரில் முழுகி நீராடிய பின்; உம்பரும் உவகை கூர - தேவர்களும் மகிழ்ச்சி மிகுமாறு; ஒப்பனை ஒப்பச் செய்தார் - அலங்காரங்கள் தக்க வகையில் செய்தார்கள்.

***

இராமன் வரவு கேட்ட பரதன் பெரிதும் மகிழ்ந்தான். துள்ளினான்; குதித்தான். நகரை அலங்கரிக்கக் சொன்னான். நால்வகைச் சேனையும், மந்திரியும் மற்றையோர் புடைசூழச் சென்று இராமனை அழைத்துக்கொண்டு அயோத்தி அடைந்தான்.

அயோத்தி மாநகர் மக்கள், மகிழ்ச்சியால் துள்ளினர்.

இராமனின் திருமுடிசூட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திருமுடிசூட்டுவதற்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடக்கின்றன. அபிடேகத்திற்காகப் பல புண்ணிய நதிகளினின்றும் தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது, அநுமனால்,