பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

119

எடுத்துரைக்கும் சுக்ரீவன் மாயாவியைத் துரத்திச் சென்ற வாலி பிலத்துனுட் புகுந்து வராதபோது நான் திரும்பி வந்து மக்கள் விருப்பப்படி பட்டம் ஏற்றுக் கொண்டேன். அப்போது கிஷ்கிந்தை அரசோடு ரூமை, தாரை என்னும் இருவரையும் பெற்றேன் என்கிறான் சுக்ரீவன். இதன் பின்னர் இலக்குவன் சீற்றத்தோடு வருவதைப் போல பேசும் பேச்சிலே ராமனது அருளால் அல்லவா சுக்ரீவன் சிறந்த புகழையும் சாஸ்வதமான வானரர் வரவையும் ரூமையையும் என்னையும் பெற்றுளான் என்றே கூறுகிறாள். இதையெல்லாம் விட மோசமாக இவர்களை எதிர்நோக்கி வரும் தாரையை வான்மீகர் வர்ணிக்கிறபோது கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடம் வைக்காமலே பேசி வருகிறார்.

ஸாபுஷ்கலந்தீ
    மதவிஹ்வலக்ஷி
பிலெம்ம காஞ்கீருண
    ஹேமஸதேகிக
ஸலக்ஷனாலக்ஷ்மண
    ஸந்நிதானம்
ஜகாமதாவி
    நமிதாங்கயஷ்டி

என்பதே அவரது வர்ணனை.

சுக்ரீவனது அந்தப்புரத்திலிருந்து வந்த தாரை கலவியால் உண்டான தளர்ச்சியோடு தடுமாறிக் கொண்டே வந்தாள், மதுபானத்தினால் தழுதழுத்த நோக்கினை உடையவளாக இருந்தாள். அரைநூல் வடம் இழுப்புண்டு வரும் நிலையில் படுக்கையில் கிடந்த படியே தேவதையாய் ஸம் போக சின்னங்கள் காணலாம் படி வந்தாள் என்பதே. வான்மீகர் தரும் தாரைக்கோலம். இந்தத் தாரையை அடியோடு மாற்றுகிறான் கம்பன்.