பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

கம்பன் சுயசரிதம்

மங்கல அணியை நீக்கி
    மணி அணிதுறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி
    குங்குமம் சாந்தம் தெவிட்டாப்
பொங்கு வெம்முலைகள்
    புகக்க் முத்தொடு மறையில் போற்றது
நங்கையைக் கண்ட வனப்பில்
    நயனங்கள் பனிப்ப நின்றான்.

அத்தோடு

பார்குலாம் முழுவெண்திங்கள்
    பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை
    இறைமுகம் எடுத்து நோக்கி
தார்குலாம் அலங்கல்மார்பில்
    தாயரை நினைந்துணர்ந்தான்


என்றல்லவா கம்பன் கூறுகிறான். இந்த ஒரு சிறு மாற்றத்தால் தாரை என்னும் பாத்திரத்தை எவ்வளவு உயர்ந்த பாத்திரமாகச் செய்திருக்கிறான் அவன்.

இந்த மாற்றத்தினைச் சுட்டிக் காட்டிய பொழுது வடமொழிப் புலவரின் வானரம் என்னும் விலங்கினுக்கு ஒழுக்கம் என்று ஒன்று இருத்தல் இயலாது. அத்துடன் அண்ணன் மனைவியைத் தம்பி சேர்த்துக் கொள்வது வானரர்களது வழக்கமாயிருத்தல் கூடும். கணவன் இறந்த பின் மறுமணம் செய்து கொள்வது வான்மீகர் காலத்து சாஸ்திர சம்மதமாக இருத்தல் கூடும் என்றும் சொல்கின்றனர், என்றாலும் வான்மீகர் அடி ஒற்றி தாரையை வர்ணிக்காமல் கம்பனுக்கு ஏன் தாரையை ஓர் உத்தம பத்தினியாக ஆக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது? அதில்தான் தமிழ் நாட்டின் பெருமையெல்லாம் அடங்கிக் கிடக்கிறது என்று